அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம்: தமிழக அரசு அறிவிப்பு..!

அரசு வழங்கும் அனைத்து சலுகைகள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரே ஆவணங்களாக இருக்கும் பட்சத்தில் பயனாளர்களுக்கு திட்டங்கள் முறையாக சேரும் என்ற அடிப்படையில் ஆதார் எண் அவசியம் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதே போல் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரையில் பலன்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

இன்று முதல்! ஆவின் நெய் விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு இணைக்கும் போது ஆதார் விபரங்கள் ஒரே டேட்டாவின் பதிவு செய்யப்படும்.

இதில் ஆதார் பயனாளர் அரசு சார்பில் ஏதேனும் திட்டத்தில் பயன் பெற்றுள்ளாரா? என்பது குறித்து ஒரே எண் மூலமாக தெரிந்துகொள்ளப்படும். அதே போல் ஆதார் இல்லாதோர், அந்த எண்ணை பெறும்வரை மற்ற ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.