திருவிழாவுக்கு மைக் செட்டு கட்ட போன இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!!

நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக திருவிழாவின்போது உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தஞ்சையில் களிமேடு பகுதியில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின்பு மற்றுமொரு இடத்தில் சப்பர தேர் விழாவின்போது ஒருவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கும் 5 லட்ச ரூபாய் நிதி உதவியினை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மற்றுமொரு திருவிழாவில் நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  நாகணம்பட்டியில் உயர் அழுத்த மின் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவிழாவுக்காக மைக் செட் அமைக்கும் போது மின்கம்பிகள் உரசி மின்சாரம் பாய்ந்ததில் கிருஷ்ணகுமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment