Connect with us

சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்..!! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்..!! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் காதலை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் விக்னேஸ்வரன் அந்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிற்கு மீண்டும் தொந்தரவு தரக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்ணின் வீட்டிற்குச் சென்று வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனையடுத்து செல்போன் டவரை வைத்து விக்கிரவாண்டி டோல்கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top