Connect with us

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் போக்சோவில் கைது

sexual assault 2

தமிழகம்

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் போக்சோவில் கைது

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 17 வயது சிறுமியை பாட்னா கடத்திச் சென்ற வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்…

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமி காணாமல் போனதாக வெப்படை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதே போன்று அதே நூற்பாலையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இளைஞர் குட்டு என்பவரும் காணவில்லை என தகவல் கிடைத்தது இதனை அடுத்து போலீசார் வடமாநில இளைஞர் குட்டு சிறுமியை கடத்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் பீகார் மாநில பாட்னா விற்கு விரைந்தனர் அங்கு இருந்த சிறுமியை மீட்டதுடன் 17 வயது சிறுமியை கடத்தி வந்த குட்டுவையும் போலீசார் கைது செய்தனர் மீட்ட சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

வெப்படை போலீசார் வடமாநில இளைஞர் குட்டுவை கைது செய்து போச்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top