குஜராத் மாநிலத்தில் பச்சிளம் குழந்தை உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கம்போயி கிராமத்தில் மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருக்கும் மின்சார வாரியத்தின் ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அழுகை சத்தம் கேட்ட இடத்தை ஊழியர்கள் தூண்டியதாக கூறப்படுகிறது. அதில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிருடன் குழந்தையை புதைத்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.