ஆன்மிகத்தை விறு விறு நடையில் தரும் எழுத்தாளர்

cad0820c3154c03f591821178e21e3e2

சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் வந்த மர்மதேசம் என்ற தொடரின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன். எத்தனையோ ஆன்மிக எழுத்தாளர்கள் இருந்தாலும் இவரின் எழுத்து கொஞ்சம் வித்தியாசமானது. தற்போது இருக்கும் இளைய தலைமுறை நபர்களிடம் ஒரு ராமாயணத்தையோ மஹாபாரதத்தையோ கொடுத்து படிக்க சொன்னால் எல்லோரும் விரும்பி படிக்க மாட்டார்கள். ஆனால் இவர் எழுதினால் படிப்பார்கள் ஏனென்றால் இவரின் எழுத்து நடை அப்படி.

இவரின் கதைகள் எல்லாம் ஆன்மிகம் சார்ந்தே இருக்கும் ஒரு ஊரை மையமாக வைத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் முக்கியமான கோவிலை மையக்கருத்தாக வைத்துக்கொண்டு அதன் பின்னணியில் கதை எழுதுவது இவர் வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து ராஜமாதங்கி என்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலை மையமாக கொண்டு துள்ளி வருகுது வேல் என்றும் இப்படி பல கதைகளை படைத்திருக்கிறார். இவை எல்லாம் ஆன்மிக கதைகள் மட்டுமல்ல இந்த கோவில்களையும் வரலாறுகளையும் பின்புலமாக கொண்ட சராசரி மக்களின் நடக்கும் கதைகள்தான் இவை.

ஆன்மிகம், அமானுஷ்யம், முற்பிறவி, மறுபிறவி, தேவதைகள், கர்மாக்கள், ராமாயணம் உண்மையா , மஹாபாரதம் உண்மையா என எல்லாவற்றையும் தெளிவாக விளக்கும் பாங்கு இவருக்கு உண்டு.

எல்லா கதைகளையும் பாமரர்களும் படிக்கும் வண்ணம் தெளிவாக சுவாரஸ்யமாக ஆன்மிகத்தோடு கலந்து தருவது இவரது சிறப்பியல்பு. சப்தக்கன்னிகள் பற்றி இவர் எழுதிய கதை மிகவும் அற்புதமானது சப்த கன்னிகள் ஒவ்வொருவரை பற்றியும் தனித்தனியே அழகாக எழுதி இருக்கிறார். 

ஆன்மிகம் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பினால் இயல்பான நடையில் எழுதும் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் கதைகளை வாசித்தாலே போதும். ஆன்மிகம் பற்றி அவ்வளவு விசயங்களை அவர் சொல்லி அழகான எழுத்து நடையில் கதை எழுதி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.