Connect with us

சென்னையில் அதிர்ச்சி: சுவர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலி!!

death 1 1

தமிழகம்

சென்னையில் அதிர்ச்சி: சுவர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலி!!

சென்னை தண்டையார் பேட்டை இளைய தெரு அருகே அமைந்திருக்கும் காமராஜர் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தெருவின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக ஒப்பந்ததாரர் அடிப்படையில் இந்த வேலைகள் நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சாலையில் அருகே தனியார் கம்பெனி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கம்பெனியின் பிடிமானம் சரியில்லாமல் போனதால் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அருகில் இருக்கும் இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 34-வயதான மசூர் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மற்ற 2 நபர்களும் இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top