பாசம் வைத்ததால் செலவு வைக்கும் பன்றியை பிரிய மனமின்றி தவிக்கும் பெண்….

நம் ஊர்ல எல்லாம் வீடுகள்ல செல்லப் பிராணி வளர்ப்பாங்க தான். ஆனா நாய் பூனை அதிகபட்சமாக லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்போம். ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல. அவர்கள் மலைப்பாம்பு, முதலை, பன்றி, ராட்சத பல்லிகள் என அனைத்து வகையான விலங்குகளையும் வீடுகளில் செல்ல பிராணியாக வளர்ப்பார்கள்.

பன்றி

அப்படி ஒரு செல்ல பிராணியால் தான் தற்போது ஒரு பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். பிரேசிலை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் சுமார் 250 கிலோ எடையுள்ள பன்றியை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். லிலிகா என பெயரிடப்பட்டுள்ள அந்த பன்றிக்கு தற்போது 3 வயதாகிறதாம்.

அந்த பன்றி, ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனியை உண்பதாக அதை வளர்க்கும் அந்த பெண் கூறியுள்ளார். மிகவும் ஆசையாக வளர்ப்பதற்காக வாங்கிய பன்றி தற்போது சக்தியை மீறி செலவு வைத்து வருவதாக அதன் உரிமையாளர் கதறி வருகிறார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “சிறிய வகை பன்றி என நினைத்து அதை வாங்கி வளர்த்தேன். அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதனை விற்பனை செய்ய நான் தயாராக இல்லை” என கூறியுள்ளார்.

என்னதான் செல்லப்பிராணியாகவே இருந்தாலும் நம் சக்திக்கு மீறி அதிக செலவு வைத்து வந்தால் ஒன்று அதை விற்பனை செய்து விடுவோம் அல்லது வீதியில் விட்டு விடுவோம். ஆனால் நான் பாசம் வைத்து விட்டேன் என்ன ஆனாலும் பரவாயில்லை நானே பார்த்து கொள்வேன் என ஒரு பன்றிக்காக அந்த பெண் பேசியுள்ளது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment