Connect with us

பிரசவ வலியோடு தவித்த பெண்: ஜே.சி.பி உதவியுடன் மீட்பு!!

Capture 63

செய்திகள்

பிரசவ வலியோடு தவித்த பெண்: ஜே.சி.பி உதவியுடன் மீட்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களை பொருத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் நீமுச் பகுதியில் உள்ள கீதாபாய் என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இருப்பினும், கனமழை காரணமாக ஆற்றுக்கு நடுவே உள்ள பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் ஆம்புலன்ஸ் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு, கீதாபாய்
மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய செயலானது மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற வாசகத்திற்கு ஏற்ப நடந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top