ஷாக் நியூஸ்! H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி..!!

நாமக்கல்லில் H1N1 வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொத்து கொத்தாக செத்து மடிவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! மதிய உணவில் பாம்பு.. 30 குழந்தைகளுக்கு வாந்தி!

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மல்லசமுத்திரம் பகுதி முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்!

அதே போல் அதிக காய்ச்சல், சிவப்பு, கருமையான தோல் புண்கள், பசியின்மை, எடை குறைதல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.