Connect with us

கிருஷ்ணகிரியில் சோகம்!! வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி!!

accident 1

தமிழகம்

கிருஷ்ணகிரியில் சோகம்!! வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருமண நிகழ்வுக்காக சென்று கொண்டிருந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் உறவினர் திருமணத்திற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டாரஸ் லாரி வேனை முந்தி செல்ல,முற்பட்டதாக கூறப்படுகிறது.

அதே போல் ஓட்டுனரும் அதற்கு ஈடுகொடுத்த முந்தி செல்லமுற்பட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் சாந்தி என்ற பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் அறித்து விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

மேலும், இத்தகைய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top