முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என தமிழ் சினிமாவில் பல துறைகளில் கால்பதித்து வருகிறார். மேலும் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
தற்போது தமிழ் சினிமாவில் சில பல முக்கிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.இந்த ஆண்டில் அந்த நிறுவனம் வெளியிட்ட, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், ராதே ஷ்யாம், டான், நெஞ்சுக்கு நீதி ,’எப்ஐஆர், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது ‘விக்ரம்’ படம் மெகா வசூல் பெற்று எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
பெரிய படங்களை வெளியீட்டு உரிமையை முதலில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மட்டுமே கைப்பற்றி வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்க பட்டு வருகிறது. ஆனால் “ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தயாரிப்பாளர்களுக்கு இந்நிறுவனத்தால் இழப்புகள் இல்லை. திரைத்துறை பாதுகாப்பாக உள்ளது” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்களைப் பற்றிய விமர்சனங்களைத் தள்ளி வைத்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட படங்களின் வெற்றியை கொண்டாட ஒரு வெற்றி விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். அதில் கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பலரையும் கலந்து கொள்ள வைக்க பேசி வருகிறார்களாம்.
தமிழ் ரிலீஸாகும் சாய் பல்லவியின் படம்! ரொம்ப நாள் கழிச்சி வந்த மாஸ் அப்டேட்!
திட்டமிட்டுள்ளனர் .