
Tamil Nadu
கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட விசாரணைக் கைதி!!: உடற்கூறு ஆய்வு அறிக்கை;
நேற்றைய தினம் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு சில அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் விசாரணை கைதிகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கூறினார்.
ஏனென்றால் பல இடங்களில் மர்மமான முறையில் விசாரணை கைதிகள் மரணமடைகின்றனர். அவர்களில் ஒருவர்தான் விசாரணை கைதி விக்னேஷ்.
இந்த நிலையில் விசாரணை கைதி விக்னேஷ் உடல் இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் என்றும் ரத்தக் கட்டுகள் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
லத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிய அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என்றும் தெரிகிறது. தலையில் ஒரு அங்குலம் அளவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதும் உடற்கூறு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. விக்னேஷின் முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
