News
மொத்தம் 450 அதுல 80 பெண்களுக்கு!கொரோனாவுக்கு தயாராக உள்ள கொடிசியா!
கண்ணுக்கு தெரியாமல் மக்களுக்கு உயிரை வாங்கும் சக்தி கொண்ட ஒரு நோய்க்கிருமி கொரோனா வைரஸ். கொரோனா ஆரம்பத்தில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரிசோதித்து பார்த்தபோது உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா தாக்கம் உள்ளது தெரியவந்தது. இந்திய அரசாங்கமே அச்சமின்றி எந்த ஒரு நாடும் பின்பற்றாத முழு ஊரடங்கு திட்டத்தினை நாடுமுழுவதும் அமல்படுத்தியது. இதனால் கொரோனா கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. மேலும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கோவையிலும் கொடிசியா வளாகத்தில் கொரோனா மயமாக்கப்பட்டுள்ளது .
மேலும் கொடிசியா வளாகத்தில் 450 படுகைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 450 படுக்கைகளில் 80 படுகைகள் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவையில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இதனால் கோவையில் கொரோனா வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் கோவை சுகாதாரத்துறை அமைப்பினர் உள்ளனர் என்பது வெளியாகியுள்ளது.
