செய்திகள்
மொத்தம் 13 இடங்கள்: 12 இடங்களில் “திமுக”! ஒரு இடம் “கூட்டணிக்கு”!!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.இந்த நிலையில் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் நம் தமிழகத்தில் தற்போது 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பல கட்சியினர் பெரும்பாலும் தனித்து போட்டியிட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும்பாலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணப்படுகின்ற மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான கூட்டணி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. அதில் திமுக கட்சி 12 இடங்களில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஒன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 118 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும் காங்கிரஸ்க்கு ஆறு ஒன்றிய கவுன்சிலர் இடங்களும், விடுதலை சிறுத்தைகளுக்கு 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
