Connect with us

13 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி மூன்று வயது குழந்தை பலி!!

death 1 1

தமிழகம்

13 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி மூன்று வயது குழந்தை பலி!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று குழந்தையின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை  சம்பவ இடத்திலேயே  பலியானது. இதனையடுத்து பைக் ஓட்டிவந்த சிறுவனை அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதோடு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்

அப்போது  சிறுவனுக்கு பைக் ஓட்டும் உரிமம் இல்லாத பட்சத்திலும் அவரது தந்தை  இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதி அளித்தஇருசக்கர வாகனம் கொடுத்தாக கூறப்படுகிறது.  இதன் அடிப்படையில் போலீசார் தந்தை, மகனை கைதுசெய்துள்ளனர்.

மேலும், 13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top