நம் தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1000, ரூபாய் 1500 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூகநலத் துறையின் மீது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஏனென்றால் சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்று சமூக நலத்துறை மீது ஐகோர்ட் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 ரூபாய் 1500 எப்படி போதுமானதாக இருக்கும். அதை விட அந்த தொகையை நிறுத்திவிடலாம் என்று ஹை கோர்ட் நீதிபதிகள் கூறினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்க கோரி நேத்ரோதயா அமைப்பு வழக்கு தொடுத்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்க கோரிய சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.