தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் திடீர் திருப்பம்!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடைப்பெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதே சமயம் கடந்த மே 18ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் நிவாரண தொகையை தமிழக அரசிடம் கேட்கலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment