மாணவி கொலை!! உயிரிழந்த தந்தையின் மரணத்தில் திடீர் திருப்பம்..!!

சென்னையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மலைப்போல் சரியும் தங்கம் விலை: குஷியில் நகைப்பிரியர்கள்!!

இந்நிலையில் மாணவியை தள்ளிவிட்ட சதீஷ் என்ற இளைஞரை இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் துறைப்பாக்கத்தில் கைது செய்தனர். இதனிடையே மாணவி கொலை குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்த போது மாணவியின் தந்தை திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நினைத்து உறவினர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனையில் அவர் விஷம் குடித்து மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவர் தங்க கவசம் விவகாரம்: யாரிடம் ஒப்படைக்கப்படும்?

மேலும், மகள் மரணமடைந்த செய்தியை கேட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment