கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் கோத்தகிரியில் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எடுத்து விசாரணையானது உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.
புத்தாண்டு! போதையில் வாகனம் ஓட்டினால் கைது- காவல்துறை எச்சரிக்கை!!
இந்த வழக்கை நீலகிரி மாவட்ட போலீசார் நடத்தி வந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அதே சமயம் வழக்கின் குற்றவாளிகளாக கருதப்படும் 8 பேர் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாயா? – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!
இவர்களுக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கூடலூரை சேர்ந்த அனீஸ், சாஜி என்பவர்கள் உதவியது விசாரணையில் தெரியவந்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.