அடடே! ஆன்லைன் விளையாட்டு தடையில் திடீர் திருப்பம்!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு தடை விதிக்கும் வகையில் மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தர்ஷா குப்தா உடை குறித்து பேச்சு: நடிகர் சதீஷ்க்கு வலுக்கும் கண்டனம்!

அதில் திறமை சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் 18-வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஆன்லைன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஆன்லைன் விளையாட்டு குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், ரம்பி போன்ற விளையாட்டுகள் திறமையான விளையாட்டு என்று பல மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளைச்சு வளைச்சு ஆபாச புகைப்படம்! 3 லட்சம் கேட்டு மிரட்டல்…இயக்குனர் ரன்ஜித் கைது!

இருப்பினும் சூதாட்டமாக அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளதால், இதனை தடை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது.

அப்போது மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரனையை நவ.16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment