பிரபல ஜவுளிக்கடையில் திடீர் ரெய்டு.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரம் சேக்குபேட்டையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி மெய்யப்பகுதியில்  உள்ள சேக்குபேட்டையில்   பிரபல தனியார்  ஜவுளி கடை  ஒன்று இயங்கி வருகிறது. இவர்களுக்கு 3 கிளைகள் இருப்பதாக தெரிகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை நாளை ஒத்திவைப்பு!

இந்நிலையில் நாள்தோறும் கோடிக்கணக்கில் பட்டுசேலைகள் உள்ளிட்ட  ஆடைகள்  விற்பனை ஆகுவதாகவும் இருப்பினும், அதற்கான வருமான வரியை கட்ட தாமதிப்பதோடு மறுப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில்  கூறப்படுகிறது.

இதன் காரணமாக  தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கடையிகளில் இன்று  காலையில் தொடங்கிய சோதனையானது தற்போது வரையில் தொடர்ந்து  நடைப்பெற்று வருகிறது.  இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள்  வெளியேற்றப்பட்டதால் திடீர்  பரபரப்பு ஏற்பட்டது.

3-வது திருமணத்தால் விபரீதம்! தந்தை துடிக்க துடிக்க கொலை!!

மேலும், இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.