Connect with us

திருமணம் செய்து வைக்க கோரி திருநங்கை தாலியுடன் திடீர் தர்ணா

love wedding 45

செய்திகள்

திருமணம் செய்து வைக்க கோரி திருநங்கை தாலியுடன் திடீர் தர்ணா

சோழவந்தான் அருகே திருமணம் செய்து கொள்வதாக இரண்டு வருடம் குடும்பம் நடத்தியவருடன் சேர்த்து வைக்க கோரி காதலன் வீட்டு முன்பாக திருநங்கை திடீர் போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருநங்கை ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு வருடம் தன்னுடன் குடும்பம் நடத்தியவரை சேர்த்து வைக்க கோரி அவரது வீட்டின் முன் தாலியுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி. திருநங்கையான இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்துரை என்ற விவேக் என்ற வாலிபரும் வரும் சேர்ந்து கிழச்சின்னம்பட்டி கிராமத்தில் தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் என்ற பெயரில் கோவில் ஒன்றை நிறுவி நடத்தி வந்தனர். இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு திருநங்கையை விட்டு பிரிந்து வந்த விவேக்கிற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த திருநங்கை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னுடன் இரண்டு வருடமாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்து விட்டு தன்னை ஏமாற்றிய வாலிபரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார், அதன் பேரில் பாலமேடு போலீசாரும் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவும் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை திடீரென விவேக்கின் சொந்த ஊரான முள்ளிப் பள்ளம் சென்ற திருநங்கை ஸ்ரீநிதி அவரது வீட்டின் முன்பாக கையில் தாலியுடன் அமர்ந்து விவேக் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தரவே சம்பவ இடம் வந்த போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்து திருநங்கையை சமரசப்படுத்தி அங்கிருந்து அனுப்பினர். திருநங்கையின் இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top