இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி; இன்று முதல் தயிர், நெய் விலை உயர்வு… ஆவின் நிர்வாகம் அதிரடி!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 கிராம் தயிர் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆகவும்,தயிர் 100 கிராம் ரூ.10 லிருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500ml ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment