வெடித்து சிதறிய பட்டாசு குடோன்.. துடிதுடித்து இருவர் பலி – பரபரப்பு காட்சிகள்!

பட்டாசு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 20க்கும் மேற்பட்ட பட்டாசு குடோன்கள் இயங்கி வருகின்றனர். இங்கு பட்டாசு தயாரிக்கும் ஆலைகளும் இயக்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் நாகதாசம்பட்டியில் பட்டாசு சேமிப்பு குடோனில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதில் பட்டாசு கிடங்கில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. கிடங்கிற்கு எத்தனை பேர் வேலைக்கு வந்தனர் என்பது குறித்து முழுமையான தகவல் கிடைக்காத நிலையில், இருவர் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஊருக்கு நடுவில் இருந்த பட்டாசு குடோன் திடீரென வெடித்துச் சிதறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.