மீண்டும் அதிர்ச்சி!! 9-வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற மாணவன்..!!

நெல்லையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு, பிளஸ்-1 மாணவன் தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அடுத்த சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் மற்றொரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவனின் காதலுக்கு மாணவி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த சூழலில் மாணவிக்கு தாலி கட்ட மாணவன் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த மாணவன் மாணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். பின்னர் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவரின் பெற்றோரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment