குஜராத்தில் வினோதம்! காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி..!!

காதல் கடலை விட ஆழமானது.. குறிப்பாக காதலுக்குக் கண்ணில்லை என்று பலரும் கூறுவதும் உண்டு. அந்த வகையில் குஜராத்தில் தன்னுடைய காதலனுக்காக காதலி தேர்வெழுதிய சம்பவம் இணைய வாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

குஜராத்தில் 24 வயதான மாணவி. இவருடைய காதலன் பல்கலைக்கழகத் தேர்விற்கு சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. அதே சமயம் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்றதால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியது.

நெல்லை; பட்டா மாறுதல் பெற 8 ஆயிரம் லஞ்சம்.. வி.ஏ.ஓ அதிரடி கைது!!

இதனால் காதலனை தேர்வில் தேர்ச்சிபெற வைக்கவேண்டும் என்று நினைத்த காதலி மாணவனின் ஹால்டிக்கெட்டில் உள்ள விவரங்களை சட்டவிரோதமாக மாற்றி தேர்வு அறைக்கு சென்றுள்ளார். அப்பொது தேர்வு அறைக்கு சென்ற நிலையில் ஹால்டிக்கெட் மாற்றியதை கல்லூரி நிர்வாகம் கண்டுப்பிடித்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா சென்ற காதலன் 3 ஆண்டுகள் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் தடை செய்துள்ளது. அதே போல் பெண்ணின் பி.காம் பட்டப்படிப்பையும் கல்லூரி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.

ஒரு மாதம்! முக்கிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

தற்போது அந்த பெண் அரசு வேலையில் பணிபுரிந்து வருவதால் வேலையை இழக்க கூடிய இக்கட்டான சூழலில் உள்ளதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.