மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பகுதியில் ஆண்கள் மட்டும் கொண்டாடும் அசைவத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா சுவாமி திருத்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலைகள் கிடையாது என்றும் அங்குள்ள பாறைகளையே தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

மனைவியின் கண் முன்னே… பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

இந்நிலையில் ஆண்டுதோறும் பெளர்ணமி தினத்தின் மறுநாள் கோயிலில் திருவிழா நடைப்பெறுவது வழக்கம். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு 150 ஆண்டுகள் 1500 கிலோ அரிசி வைத்து வைத்து சமைப்பார்கள். அதன் படி, இன்றைய தினத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்றாக கூடி உணவு சமைத்தனர்.

பின்னர் கடவுளுக்கு படைத்து விட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுப்பார்கள். அதே போல் சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக காய்ந்தவுடம் நாளடைவில் மாயமாகும் என்பது ஐதிகமாக இருந்து வருகிறது.

குடிபோதையில் அநாகரீகம்: பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது!!

மேலும், இந்த திருவிழாவின் மூலம் நடப்பாண்டின் விவசாயிம் செழிப்பாக இருக்கும் என்றும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.