திருப்பதிக்கு டப் கொடுக்க ரெடியாகும் திருச்செந்தூர்… அறநிலையத்துறையின் மாஸ்டர் பிளான்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும் வகையில் மெகா திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் திருச்செந்தூரில் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மேமம்பாட்டு திட்ட பணிகளையும்
அத்துடன் கோவில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெறுவதற்கான திட்ட பணிகளை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த மெகா திட்ட பணிகளில் கோவில்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் இராஜகோபுரம் அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரியும் அளவிற்கு கட்டிடம் கட்டிடவும், ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் அன்ன தானக் கூடம் அமைக்கவும் , பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைகாட்சி வசதி , குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிரந்தரமாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த மெகா திட்ட பணிகள் தொடங்க பட்டுள்ளது..

தற்போது இந்த மெகா திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவில் வளாகத்திலுள்ள கலையரங்கம் மற்றும் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை க்கு செல்ல கூடிய வழிகள் முழுவதும் பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்த பட்டு ஜல்லிக் கல் மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டும் மெகா திட்டபணிகளுக்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது..

கோவில் கலையரங்கம் இருந்த இடத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கூடிய வழி தடங்கள் மற்றும் கோவில் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தகவல் மையமும் (Reception hall )வர இருக்கிறது.

இதற்கு பின் புறம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான அதிகப் படியான கழிவறைகள் கட்டுவதற்கான பணிகளும், மேலும் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து நாழி கிணறு செல்லக்கூடிய வழியின் எதிர் புறம் உள்ள இடத்தில் பக்தர்கள் கண்டு களித்திட கலை நிகழ்ச்சிகளுக்கான மாபெரும் கலையரங்கமும், தினந்தோறும் வரக்கூடிய பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிடும் பொருட்டு கூட்ட நெரிசல் இல்லாத அளவிற்கு முடிகாணிக்கை செலுத்திடவும் முடிகாணிக்கை மண்டபத்தினை விரிவுபடுத்திடும் பணியும் தற்போது முதற்கட்ட பணியாக நடைபெற்று வருகின்றது

இன்னும் இரு வருடங்களில் இத்திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ள நிலையில், தற்போது கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் திருச்செந்தூர் கோவில் திருப்பதிக்கு இணையாகுவதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.