நள்ளிரவில் கரையை கடக்கும் புயல்… எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருக்கும் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா அருகே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கரையை கடக்கும் போது 56 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்பதால் 3 மாவட்டங்களில் ரெட் அலர் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதே போன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.