உலகமே தற்போது பசியின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் பஞ்சம் பட்டினி அதிகரித்துக் கொண்டே வருகிறது. என்ன தான் இந்தியா நெல் உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும் பட்டினி நாடுகள் பட்டியலில் 105வது இடத்திற்கு பின்தள்ளி காணப்படுவது மிகுந்த சோகமான தகவலாக காணப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் உணவுப்பொருட்களின் வீணாடிப்பதும் அதிகமாகவே நிகழ்கிறது. ஹோட்டல்கள், வீடுகள் போன்றவற்றில் உணவுப் பொருட்கள் அதிகமாக வீணாகின்றன. இந்த சூழ்நிலையில் எந்த ஒரு உணவுப் பொருட்களை சிறிதும் வீணாடிக்காத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது ஒன்றிய அரசு கூறியது நாம் பெருமைப்பட வேண்டிய விசயமாக காணப்படுகிறது.
அதன்படி 2021-ம் ஆண்டில் உணவுப் பொருட்களை சிறிதும் வீணாடிக்காத மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பாராட்டி இருக்கிறார். உணவுப் பொருட்கள் வீணடிப்பு தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அவர், இந்தியாவில் கடந்த ஆண்டு 2.77 கோடி மதிப்புள்ள சுமார் ஆயிரத்து 900 டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.