Connect with us

மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்: பள்ளி நிர்வாகத்துடன் செல்வி பேசியதாக ஆதாரம்!!

death 5

தமிழகம்

மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்: பள்ளி நிர்வாகத்துடன் செல்வி பேசியதாக ஆதாரம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படித்து வந்த மாணவி கடந்த மாதம் பள்ளியின் விடுதியில் இருக்கும் 3-வது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக ள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல் புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

அதோடு மாணவியின் தாயார் செல்வி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து தன்னுடைய மகளுக்கு நீதிவேண்டும்.. என கோரிக்கை வைத்து வருகிறார். இந்த சூழலில் சிபிசிஐடி போலீஸார் மூலமே உண்மையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதியதாக ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, மாணவி உயிரிழந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top