Connect with us

7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை… போக்சோ நீதிமன்றம் அதிரடி!

sexual harassment

தமிழகம்

7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை… போக்சோ நீதிமன்றம் அதிரடி!

கடலூரில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பாலமுருகன் லாரி டிரைவர். இவர், 2.4.2021ல் தேதி, குடிபோதையில் மனைவியிடம் பைக் கேட்டு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார். அச்சமடைந்த மனைவி, மகன் மற்றும் தனது தாயுடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 2ம் வகுப்பு படித்து வந்த தனது 7 வயது மகளை லாரி டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை கடலுார் ‘போக்சோ’ கோர்ட்டில் முடிந்த நிலையில், இன்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார்.லாரி டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம், மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு இழப்பீடாக ஏற்கனவே 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை 30 நாட்களுக்குள் பெற்றுத் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top