சென்னை வடபழனியில் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பொருட்கள் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் தமிழ் திரை உலகில் 77 ஆண்டுகளாக மூன்று தலைமுறையாக வெற்றிகரமாக இயக்கப்பட்ட நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோ கடந்த 1945 ஆம் ஆண்டு காரைக்குடியில் முதன்முறையாக ஸ்டூடியோவை ஏவி மெய்யப்பன் தொடங்கினார்
பின்னர் 1948 ஆம் ஆண்டு வடபழனிக்கு இடமாற்றப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ தனது வெற்றி நடையை தொடங்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களை அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான்.
தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ வழாகத்தில் அந்தகாலத்தில் பட சூட்டிங் போது பயன்படுத்தப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக ஹெலிடேஜ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏவிஎம் சரவணன் அவரது மகன் குகன் இயக்குனர் எஸ் பி முத்துராமன் நடிகர்கள் சிவக்குமார் கமல்ஹாசன் பாடலாசிரியர் வைரமுத்து அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு படங்களில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன இவை தவிர பட சூட்டிங் பயன்படுத்தப்பட்ட பழமையான சைக்கிள் இருசக்கர வாகனங்கள் கார்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன .
பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் சக்சஸ் என பேசி காட்சி உருவாக்கப்பட்ட இடத்தில் படபிடிப்பின் 50 ஆண்டு நிறைவை ஒட்டி அவரது சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது. மேலும் இங்கு இடம் பெற்றுள்ள பொருட்களை பொதுமக்களும் கண்டு ரசிக்கும் இதமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது .
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு 110 வகையான மூலிகைகள் வெளியீடு !
இதனை செவ்வாய்க்கிழமை தவிர்த்து பிற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வை விடலாம், தேசிய விடுமுறை நாட்களில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ள ஏவிஎம் நிறுவனம் பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி பார்வை இடலாம் என்று தெரிவித்துள்ளது