எதற்கெடுத்தாலும் தகராறு; ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்!!!

தற்போது நாம் கொடுமையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறலாம். ஏனென்றால் தினம் தோறும் எண்ண முடியாத கொடுமைகள் நடந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தகராதினால் ஏற்படும் கொலைகள் நம் தமிழகத்தில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

இதிலும் தந்தை மகன் இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் இருவரும் மாறி மாறி தாக்கி கொலை செய்வதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் அக்கம் பக்கத்தினர் இடையே விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் அருகே நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே டி அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடிக்கடி தகராறு செய்து வந்த தந்தை காளியப்பனை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் சரவணகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment