கனவில் வந்த பாம்பு!! விவசாயின் நாக்கை கடித்த விபரீதம்..!!

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயி கனவில் அடிக்கடி பாம்பு கடிப்பதுபோல் தோன்றியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த விவசாயி தனது மனையுடன் கூறியுள்ளார். இதனையடுத்து ஜோதிடன் ஒருவரிடன் சென்று தம்பதியினர் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். அபோது ஈரோட்டில் சாமியார் ஒருவர் கோயில் வைத்திருப்பதாகவும், அவரிடம் சென்று பாம்பு பரிகாரம் செய்தால் நல்லது நடக்கும் என தெரிவித்து உள்ளார்.

சென்னையை உலுக்கிய கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

இதனை நம்பி அங்கு சென்று சாமியாரிடம் கேட்டப்போது தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பதாகவும், நாக சாந்தி பூஜை செய்தால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று விவசாயியிடன் பூசாரி தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட விவசாயி நாகசாந்தி பூஜைக்கு அமர்ந்துள்ளார். அப்போது பூஜை செய்யப்பட்ட பிறகு ஆசிர்வாதம் வாங்குவதற்காக நாக்கை நீட்டியுள்ளார். அப்போது கொடிய விஷமுள்ள நாக பாம்பு விவசாயி நாக்கில் கொத்தியுள்ளது.

உஷார்! அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை – வானிலை அப்டேட்!!

இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி விவசாயின் நாக்கை கத்தியால் அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் நிலைகுலைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் விவசாய அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விவசாயி உயிர் பிழைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு மத்தியில் நாக சாந்தி பூஜைக்காக சென்று விவசாயியை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.