ஓடுற லாரியில திடீர்னு எங்கிருந்தோ பறந்து வந்த பாம்பு! பிடித்த டிரைவர்; 30 பேர் படுகாயம்! காரணம் யாருனு தெரியுமா?

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் தான். சிறுவர்களின் விளையாட்டு தனத்திற்கு அளவே கிடையாது. அவர்களின் விளையாட்டுத்தனம் ஒரு சில நேரங்களில் பெரும் ஆபத்தை உருவாக்கும். அதன்படி சிறுவர்களின் விபரீத விளையாட்டால் முப்பது பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

ஏனென்றால் அவர்கள் பாம்பை பிடித்து லாரி மீது வீசினர். பாம்பை பிடித்து லாரி மீது சிறுவர்கள் வீசியதால் நிலைகுலைந்த ஓட்டுனர் பிரேக் அடித்தார். இதனால் லாரிக்கு பின்னால் வந்த வாகனங்கள் தொடர்ந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சென்னை-திருச்சி சாலையில் பேரங்கியூரில் சிறுவர்கள் இறந்த பாம்பை தூக்கி வீசியதால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. பழைய இரும்பு பொருள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மீது சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக பாம்பு வீசியதால் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பாம்பை வீசியதால் நிலைகுலைந்த லாரி ஓட்டுநர் சுப்பிரமணி பிரேக் பிடித்தால் பின்னால் வந்த பேருந்து மற்றும் ஆட்டோ அடுத்தடுத்து மோதியது. வாகனங்களின் தொடர் விபத்தால் அரசு பேருந்து இரும்பு கடை மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

விபத்தில் சிக்கிய பேருந்தில் சென்ற பயணிகள் ஆட்டோ ஓட்டுநர் உள்பட 30 பேர் நல்வாய்ப்பாக காயத்துடன் உயிர் தப்பினர். சிறுவர்களின் விபரீத விளையாட்டால் விழுப்புரம்-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment