காற்று பட்டாலே நோய்கள் காணாமல் போகும்; இந்த மரத்திற்கு இவ்வளவு மருத்துவ குணமா?

மூட்டுகளுக்கு இடையே உள்ள பசையை உற்பத்தி செய்யும் அபூர்வமான மூலிகை மரம் கிளுவை. இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீருமாம். இந்த மரத்தின் காற்று எப்படி உடல் வியாதியைத் தீர்க்கும் என்ற கேள்வி எழுகிறதா?

தேனீக்கள் மலர்கள் எல்லாம் தேடி தேனை சேகரிக்கும், அதுவே, குறிப்பிட்ட மலர்களில் மட்டும், உதாரணமாக, முருங்கைப்பூக்களில் மட்டும் எடுக்கும் தேன் ஆண்மை குறைபாடு போக்கும், மாம்பூவில் இருந்து கிடைக்கும் தேன் உடலை வலுவாக்கும் என்று சமீப காலங்களில் நாம் அறிந்திருப்போம்.

குறிப்பிட்ட மலர்களில் உள்ள தேன் அதன் தனித்தன்மையால், உடல் பாதிப்பை தீர்ப்பதுபோல,அரிய வகை மரமான கிளுவை மரத்தின் காற்று, மனிதரின் உடல்நலத்தை சீராக்கும்.

கிளுவை மரத்தைப் பற்றியும் அதன் மருத்துவ நன்மைகளை பற்றியும் இந்த பதிவில் நாம காணலாம். பொதுவாக மரங்கள் பிராணவாயு தர மட்டுமல்ல! அதன் நிழலில் அமர, வியாதியையும் தீர்க்கும். சில மரங்களின் நிழலில் அமரும்போது, வியாதிகள் சரியாகிவிடும்.

அந்த மரங்களின் இதமான காற்று, உடலில் படும்போது, அந்த மரத்தின் காற்றால் சரியாகக்கூடிய வியாதிகள் விலகிவிடும், என்பதை முன்னோர் பெரு மக்கள் நன்கு உணர்ந்தே, அத்தகைய மரங்களை தல விருட்சங்களாக, கோவில்களில் வளர்த்தனர்

கிளுவை மர அமைப்பு:

கிளுவை இதன் அறிவியல் பெயர் Commiphora caudata, Engl.; Burseraceae) என்பதாகுமல

வேலிக்காக வளர்க்கப்படும் சிறுமரவகையான இது முக்கூட்டு இலைகளையும், மென்மையான கட்டையினையும் உடைய இலை உதிர் மரம்.

இதில் சிறுகிளுவை,  பெருங்கிளுவை என இருவகைகள் உள்ளன. இவை முறையே செங்கிளுவை ,வெண் கிளுவை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. வெண் கிளுவையின் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

அடுக்கான இலைகள் அமைப்பில் நீண்ட தண்டுகளுடன் கிளுவை மரங்கள் காணப்படும்.  இந்த மரத்தை பொதுவாக வயல்வெளிகளில் அதிகம் காணமுடியும்.

தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வயல்களில் பயிரிட்டுள்ள நெல்மணிகளை கால்நடைகள் மேய்ந்துவிடாமல், பயிரைக் காக்கும் வண்ணம்
வயல்வெளிகளிலும், தோட்டங்களிலும் வேலிகள் அமைத்து அந்த வேலிகளுக்கு அரணாக நெருக்கமாக இந்த கிளுவை மரத்தை நட்டு.வளர்ப்பார்கள்.

ஆனால், இந்த மரம் நமக்கு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும். கிராமங்களில் ஆடு, மாடுகளுக்கு இம்மரத்தின் இலைகள் தீவனமாக வழங்கப்படுகிறது.

இந்த மரத்தின் பட்டை, வேர், பிசின், இலை என அனைத்துமே மருத்துவ குணமுடையதுதான். கிளுவை மரம் வறண்ட பகுதியில்தான் வளரும்.

இது இலையுதிர் மரமாகும். அடுக்கில் மூன்று இலைகளுடைய கூட்டிலை களையும் வெண்மையான லேசான தண்டையும் கொண்டது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.

ஆயுர்வேதத்திலும், யுனானி மருத்துவத்திலும் கிளுவை முக்கிய மருந்தாக இடம் பிடித்துள்ளது.  சுவைக்க சிறிது புளிப்புடன் துவர்க்கும் குணமுடைய கிளுவை மரத்தின், இலைகள்,வேர்,தண்டு, பட்டை மற்றும் பிசின் போன்றவை மனிதர்களின் பல வியாதிகள் தீர்க்க, இயற்கை நமக்கு அளித்த கொடையாகும்,

பொதுவாக கிளுவை மரங்கள், மனிதர்களின் நரம்பு தளர்ச்சி வியாதிகளைப் போக்கவும், சிறுநீரக கற்கள் பாதிப்புகள் நீக்கி, சிறுநீரகத்தைக்காக்கும், அரு மருந்தாவதாக, சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

கிளுவை மர இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, அந்த நீரைப் பருகிவர,அநேக உடல் பாதிப்புகள் விலகும்.

ஓலியோ ரெசின் என அழைக்கப்படும், கிளுவை மரத்திஇலிருந்து கிடைக்கும் மரப்பிசின், மூட்டுகளுக்கு இடையே உள்ள பசையை உற்பத்தி செய்யும் தன்மை உடையது.

மேலும் இந்த மரப்பிசின் சரும வியாதிகள் மற்றும் வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

இந்த மரத்திலிருந்து கிடைக்கும் ஓலியோ ரெசின் எனும் மரப்பிசினை சாப்பிட்டால் அதிக உடல் எடை கொண்டவர்கள் ஆரோக்கியமாக கூடுதல் எடையை இழப்பார்கள்.

உடல் எடைக்குறைப்பில் பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த இயற்கை நிவாரணியாக, கிளுவைமரப்பிசின் திகழ்கிறது.

கிளுவைமரப்பிசினை வறுத்து தூளாக்கி, நீரில் கொதிக்கவைத்து முறையாக சாப்பிட்டு வர, அதிக உடல் எடை குறைந்து, உடல் வனப்பு பெறுவர்.

அதிக மதுப்பழக்கத்தாலும், இதர பாதிப்புகளாலும் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தால் கல்லீரல் செயலிழக்கும் கடுமையான நிலையை சரிசெய்து, மனிதர்களின் உடல் நலத்தைக்காத்து, கல்லீரல் இழந்த ஆற்றலைப்பெற்று மீண்டும் நல்லமுறையில் செயல்பட, கிளுவைப்பிசினை தூளாக்கி, வெந்நீரில் கலந்து தினமும் காலையில் பருகி வரலாம்.

உடலில் நெடு நாட்களாக இருந்து இன்னல்கள் அளிக்கும் கட்டிகளை கரைத்து, பக்கவாதத்துக்கும் இது மருந்தாகிறது.

கிளுவை இலையை அரைத்து தடவி வர, வெண் குஷ்டம் எனும் சரும வியாதிக்கு நல்ல மருந்தாகிறது, இதற்கு கிளுவைமரப்பிசினை நீரில் இட்டு பருகியும் வரலாம்.

சிலருக்கு சுவாசபாதிப்புகளால், தொண்டையில் புண் உண்டாகி, உணவை சாப்பிடமுடியாமல், பேச முடியாமல் அவதிப்படுவர்

அவர்கள் கிளுவைமரப்பிசினை தண்ணீரிலிட்டு சூடாக்கி, அந்த நீரில் வாய் கொப்பளித்துவர, விரைவில் தொண்டைப்புண் ஆறிவிடும்.

சிலருக்கு உடல்சூட்டினால், கடுமையான வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கமுடியாத அளவுக்கு வேதனை ஏற்படும்.

இந்த பாதிப்புகள் நீங்க, கிளுவை இலைகளை நன்கு அரைத்து, கடைந்த மோரில் கலந்து பருகிவர, வயிற்றுக்கடுப்பு பாதிப்புகள் யாவும் நீங்கிவிடும்.

கிளுவை மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை ஆதாரமாக வைத்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மருந்து சிறுநீரக கோளாறுகளுக்கும், நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

கிளுவை மரத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறு கிளுவை, பெருங் கிளுவை, வெண் கிளுவை என அவற்றைப் பாகுபடுத்தலாம். இவற்றில் கோயில் நந்தவனங்களில் வெண் கிளுவை மரங்கள் அதிகம் வளர்க்கப்படும்.

கிளுவை மரத்தின் மருத்துவ பயன்பாட்டில் குறிப்பிடத்தக்கது,
அது மனிதரின் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது என்பதுதான்.

இந்த மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஓலியோ ரெசின் எனப்படும் பிசின்தான் சிறுநீரக கோளாறுகள் மற்றும் நரம்புத் தளர்ச்சிக்கு பயன்படு கிறது.

இது கல்லீரலின் வீக்கத்தை குணமாக்குகிறது.அதிக மதுபழக்கத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்து ஆபத்தான நிலையில் உள்ள கல்லீரலை மீண்டும் இந்த மரத்தின் பிசின் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

இது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. சிறுநீரகக் கற்களை கரைக்கிறது.

எலும்பு மூட்டு தேய்மானத்தை குணமாக்குகிறது.

மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைகளை தீர்க்கிறது. ஆண்மையைப் பெருக்குகிறது.

தோல் நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் அருமருந்தாகிறது.

நாள்ப் பட்ட கட்டிகளை கரைக்கவும், வெண் குஷ்டத்துக்கும், மார்புச்சளிக்கும், மண்டைச்சளிக்கும் மருந்தாகிறது.

மூட்டு வலி மற்றும் பக்கவாதத்துக்கும் சிறந்த மருந்தாகிறது.

பிசினை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கொப்பளித் தால் தொண்டைப்புண் ஆறிவிடும்.

மரத்தின் பட்டை நரம்புகளையும், தசையையும் பாதுகாக்கும். இலையை அரைத்து எலுமிச்சம் பழம் அளவுக்கு தயிரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகிவிடும்.

புஷ்ப விதிகளின்படி கிளுவை மரப்பூ கோட்டுப்பூ வகையை சேர்ந்ததாகும்.

இத்தகைய அபூர்வ மருத்துவ குணம் கொண்ட கிளுவை மரம் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழையூரில், சிவன் கோயில் வீதியில் அமைந்திருக்கும் திருக்கடைமுடி நாதர் ஆலயத்தில் தல் விருட்சமாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews