ஆறு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை!! இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை;

கடந்த சில வருடங்களாக நம் இந்தியாவில் அதிக அளவு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பள்ளி மாணவிகள் இடையே பாலியல் வன்கொடுமைகளானது நம் தமிழகத்திலும் அதிக அளவு நடைபெறுகிறது.

இதில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனையும் வரிசையாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதி அறிவித்துள்ளார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் அருகே ஆறு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு 20 ஆண்டு சிறை இன்று மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில் மணிகண்டன் என்ற இளைஞருக்கு இருபது ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment