ரஜினி செய்த ஒற்றை செயல் என்னை அவர்தான் சூப்பர் ஸ்டார் என நினைக்க வைத்தது… பாண்டியராஜன் பகிர்வு…

பாண்டியராஜன் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் நடிகராக ஆசைப்பட்ட பாண்டியராஜன் தனது உயரம் காரணமாக பல சவால்களை எதிர்கொண்டார்.

அதனால் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்னர் இயக்குனர் ஆகி, அடுத்துதான் நடிக்க ஆரம்பித்தார் பாண்டியராஜன். 1985 ஆம் ஆண்டு ‘கன்னி ராசி’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதே படத்தில் சிறிய தோற்றத்திலும் நடித்திருப்பார்.

அடுத்ததாக அதே ஆண்டு ‘ஆண் பாவம்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் பாண்டியராஜன் அவர்களே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். முதல் திரைப்படமே வெற்றியாக பாண்டியராஜன் அவர்களுக்கு அமைந்தது.

‘ஆண் பாவம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ (1986), ‘முத்துக்கள் மூன்று’ (1987), ‘தாய்குலமே தாய்குலமே’ (1985), ‘பாட்டி சொல்லை தட்டாதே’ (1988), ‘பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது’ (1993), ‘காலம் மாறி போச்சு’ (1996), ‘புருஷன் பொண்டாட்டி’ (1996), ‘மனைவிக்கு மரியாதை’ (1999), ‘எங்க அண்ணா’ (2005), போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் பாண்டியராஜன்.

இந்நிலையில், தற்போது பாண்டியராஜன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களைப் பற்றி சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஒருமுறை நான் ஏர்போர்ட்டில் இருக்கும் போது ரஜினி அங்கே வந்தார். நான் அவரைப் பார்த்து கையசைத்தேன். ரஜினி பார்க்காமல் சென்று விட்டார். சரி, நானும் அவர் கவனிக்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், மறுநாள் அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. ரஜினி என்னிடம், என்னை மன்னிச்சிருங்க, அப்போ இருந்த சூழ்நிலையினால ஏர்போர்ட்ல உங்ககிட்ட பேசமுடியல என்று சொன்னார். நான் மெய்சிலிர்த்து விட்டேன். இவ்வளவு தன்னடக்கம் கொண்ட மனுஷனா இருக்கிறார். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார் என நினைத்துக் கொண்டேன் என்று பகிர்ந்துள்ளார் பாண்டியராஜன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews