News
கொரோனாவில் இருந்து குணமாணவர்களுக்கு மீண்டும் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் சிகிச்சை எடுத்து குணமாணவர்களுக்கு மீண்டும் மூன்று மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று வெளி வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி என்ற அமைப்பின் சார்பில் கொரோனா நோயால் குணம் அடைந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது
இந்த ஆய்வின் முடிவில் கொரோனா வைரஸிலிருந்து சிகிச்சை எடுத்து குணமான பின்னர் மூன்று வாரங்களில் அவர்களுக்கு மீண்டும் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாகவும், எதிர்ப்புச் சக்தி குறைவதால் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது
மூன்று மாத காலத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது
எனவே கொரோனாவால் குணமாகியவர்கள் மீண்டும் கொரோனாவால் தாக்கப்பட மாட்டார்கள் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
