
செய்திகள்
சீனா: இரண்டாக உடைந்த கப்பல்.. கடலில் மூழ்கிய பரபரப்பு காட்சி…
சீனாவில் ஹாங்காங் அருகே சாபா புயலில் சிக்கிய கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடல்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கப்பலொன்று சாபா புயலில் சிக்கியது. இதனால் கடலின் கொந்தளிப்பால் அலை மோதிய கப்பல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்க தொடங்கியது.
இதனிடையே உடனடியாக ஹாங்காங் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இருந்தவர்களை கயிறு கட்டி மீட்க முயன்றனர். அபோது 3 பேரை மீட்ட நிலையில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது.
இந்த சூழலில் கப்பலில் இருந்த 27 நபர்களின் நிலைமை தெரியாமல் இருப்பதனால் மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், இரண்டாக உடைந்த கப்பலின் காட்சியானது டைட்டானிக் படத்தை நினைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது.
