Connect with us

தமிழ்நாட்டில் 10 திருக்கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்!!-தொடங்கி வைத்தார் சேகர் பாபு;

கோவில்

செய்திகள்

தமிழ்நாட்டில் 10 திருக்கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்!!-தொடங்கி வைத்தார் சேகர் பாபு;

தமிழ்நாட்டில் 10 திருக்கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்!!-தொடங்கி வைத்தார் சேகர் பாபு;

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு விதமான திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பதாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்து அறநிலையத் துறையை மேம்படுத்த இந்து அறநிலையத்துறையின் சார்பில் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அதன்படி தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளார். அவர் நாள்தோறும் கோவில்கள் மற்றும் அர்ச்சகர்கள் பற்றிய பல்வேறு விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டு கொண்டு வருகிறார். இந்து மக்களுக்கு மிகுந்த பிரயோஜனம் உள்ளதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்களில் திருநீறு, குங்குமம் வழங்கும் திட்டம் பற்றி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 முக்கிய திருக்கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

5 முருகன் கோவில்கள், 3 அம்மன் கோவில்கள். ஒரு வைணவக் கோவில் மற்றுமொரு சிவன் கோவிலில் இலவச பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top