Connect with us

மீண்டும் ஒரு ரவுடி பேபியா? சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

190554 new movie

பொழுதுபோக்கு

மீண்டும் ஒரு ரவுடி பேபியா? சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை கேரக்டரில் நடிக்கும் படம் டிரைவர் ஜமுனா, டிரைவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிசேக் குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ஐஷ்வர்யா ராஜேஷ் ஜல்சா படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்தை பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்குகிறார்.

grand shoot of jalsa movie prabhudeva aishwarya rajesh photos pictures stills

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு தேவாவுடன் யோகிபாபு, தேவ தர்ஷினி சேத்தன் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகம் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

DjgyxlvUwAAwPdH 1

இந்த படத்தில் பிரபு தேவா ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக கொரியோகிராப் செய்துஉள்ளார். அந்த பாடல் அவர் முன்னதாக கொரியோகிராப் செய்த தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலை விட சிறப்பாக அமைந்து உள்ளதாம் . யுவன்சங்கர் ராஜா இசையில் ரவுடி பேபி பாடல் அமைந்திருக்கும்.

 

தனுஷ் மற்றும் தீ பாடிய ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. குறிப்பாக இதன் வீடியோ பாடல் யூடியூப்பில் 1 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் ரவுடி பேபி பாடலை விட மிக சிறப்பாக அமைந்துள்ளதாம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடமாடியுள்ள ஜல்சா பட பாடல். இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெகு சிறப்பாக நடனமாடியுள்ளாராம்.

c524212c46ce954fdf127bffde4831b6

 

குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ன் அம்மா மற்றும் அண்ணன் சிறந்த பின்னணி நடன கலைஞர் ஆவர், ஐஸ்வர்யாவும் படங்களில் நடிப்பதற்கு முன் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் படம் இரண்டு பாகங்களாக? வெளியான தகவல்!

இதுவரை அவர் பல படங்கள் நடித்திருந்தாலும் அவரது நடனத்திறமையை வெளிகாட்ட வாய்ப்பு கிடைக்க்கத்தால் தற்போது ஜல்ஸா படத்தின் மூலம் தனது திறமையை வெளிகாட்டியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top