சிறையில் வெடித்த கலவரம்.. துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!

மெக்ஸிகோவில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்ஸிகோவை பொறுத்த வரையில் பயங்கரவாதிகளில் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் நேற்றைய தினத்தில் சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் திடீரென வன்முறை வெடித்தது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்த சம்பவத்தின் போது சிறைக் கைதிகளைப் பார்க்க வந்த பார்வையாளர்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் சிறையில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இத்தகைய விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் 10 பேர் சிறை காவலர்கள் என்றும் 4பேர் கைதிகள் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 13 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தானில் பரபரப்பு…. எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!!

இந்த வன்முறையில் 24 சிறை கைதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும், கையில் துப்பாக்கியுடன் நின்ற 2 பேரை உள்ளூர் போலீசார் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.