19 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு.. போலீசார் கொடுத்த அறிக்கையால் பரபரப்பு!!

தலைநகர் சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு 3 பெண்கள் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் 3 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதே சமயம் 30 கிலோ கஞ்சாவும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ரேஷனில் 10 கிலோ கியாஸ் சிலிண்டர்; எப்போது தெரியுமா?

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வு நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது 3 பெண்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் கஞ்சா ஏன் குறைவாக உள்ளது? என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது காவல்துறையில் தரப்பில் கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெண்களிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காவல் நிலைத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு – தமிழகம் இரண்டுமே ஒன்றுதான்.. பாஜக நிர்வாகி குஷ்பு!

அதே சமயம் காவல்நிலையம் மிகவும் சேதமாகி இருப்பதால் எலி தொல்லை அதிகாக இருந்துள்ளது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தது நீதிபதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் மீது சாட்சியம் நிரூபணமாகாததால் 3 பெண்களையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் உத்தரவு பிறத்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.