மகன் கைதை அடுத்து வீட்டில் ரெய்டு: ஷாருக்கானுக்கு சோதனை மேல் சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்கள் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் ஜாமீன் கிடைக்காததால் தற்போது சிறையில் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகன் கைதால் ஷாருக்கான் குடும்பமே நிலைகுலைந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சோதனையாக அவருடைய வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் வாட்ஸ்அப் மெசேஜ் சோதனை செய்யப்பட்டதாகவும் அந்த மெசேஜை சோதனை செய்ததன் அடிப்படையில் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஆர்யன்கான் வாட்ஸ்அப் மெசேஜ் அடிப்படையில் பிரபல நடிகை அனன்யா பாண்டே அவர்களின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment