பூஜையறையில் அமைதியான சூழல் அவசியம்

இறைவனை நினைத்து பூஜை செய்தால் கேட்டது கிடைக்கும். நமது துன்பம் போகும் என்பது ஆன்றோர் மொழி. தினமும் கோவிலில் சென்று பூஜை செய்தாலும் வீட்டில் பொறுமையாக பூஜை செய்வதென்பது சந்தோஷமான ஒரு விசயம் ஆகும்.

பூஜை செய்யும்போது இறைவனை மனதில் நிறுத்தி பூஜை செய்ய வேண்டும் அப்படி மனதில் நிறுத்தி பூஜை செய்ய சுற்றுப்புற சூழ்நிலைகள் மிகவும் அவசியம்.

சுற்றுப்புற சூழ்நிலைகள் என்றால் பூஜையறை அருகே பெரிதாக மற்றவர்கள் பேச்சு சப்தம் கேட்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூஜையறை மிகவும் வியர்த்துக்கொட்டாமல் காற்றோட்டமாக இருக்க வேண்டும். மனதுக்கு அப்போதுதான் அமைதியாக இருக்கும். மனதில் பல தேவையற்ற பல விசயங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு பூஜைக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

பூஜையறையில் மிகுந்த வாசனை மிகுந்த ஊதுபத்திகள் மிகவும் அவசியம். வாசனை என்ற பெயரில் ஏதேதோ தலைவலி தரும் வாசனையில் ஊதுபத்திகள் கிடைக்கின்றன.அதை எல்லாம் தவிர்க்க வேண்டும். நல்ல சுகந்தமான பத்திகளை பூஜையறையில் வைக்க வேண்டும்.முக்கியமாக சந்தன வாசம் தரும் பத்திகள் பூஜையறைக்கு ஏற்றவை.

எல்லாவற்றையும் விட பூஜையறை மிக சுத்தமாக இருக்க வேண்டும். ஸ்வாமிக்கு வாசனை தரும் மலர்களை அணிவிக்க வேண்டும்.

அது போல் நல்ல சாம்பிராணி போடவேண்டும். இது போல விசயங்கள் உங்களை பக்தி பரவசத்திற்கு இழுக்கும்.இப்படி மணமான விசயங்களை பூஜையறையில் சேர்த்தால் உங்கள் மனமும் ஒன்றுபடும் நல்ல நிலையில் அமைதியாக ஸ்வாமி தரிசனம் செய்ய இவை ஏற்றது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews