Connect with us

தீப்பிடித்து எரிந்த தனியார் பள்ளி வாகனம்: அரக்கோணத்தில் பரபரப்பு!!

bus

தமிழகம்

தீப்பிடித்து எரிந்த தனியார் பள்ளி வாகனம்: அரக்கோணத்தில் பரபரப்பு!!

அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில், பள்ளி மாணவர்களை அழைக்க சென்ற பள்ளி வாகனம் திடிரென புகை வர தொடங்கியுள்ளது. அப்போது பேருந்தின் பின்னால் வந்தவர்கள் பஸ் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் பள்ளி வாகனத்தில் இருந்த 4 பேர் உடனடியாக கீழே இறக்கப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் அரக்கோணம் தீயணைக்கும் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும், தனியார் பேருந்து சுமார் 80 சதவீதம் தீயில் கருகி நாசமாகியது. சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தியதில் உள்ள பேருந்தின் பேட்டரி ஒயர் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததால் தீ பிடித்தாக கூறினர்.

மேலும், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் பேருந்து இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top