சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த வேன் அப்பளம் போல் நொறுங்கிய தாக கூறப்படுகிறது.
குறிப்பாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணி நடைப்பெற்று வரும் காரணமாக நாள்தோறும் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதே போல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களை பூங்தமல்லி போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.